/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 11, 2025 01:33 AM
தர்மபுரி, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில துணைத்தலைவர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனியம்மாள் முன்னிலை வகித்தார். செயலாளர் கலைச்செல்வி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில், அரசு மருத்துவமனகைளில், 4,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை, பயிற்சி பெற்ற செவிலியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை, சமூக நலத்துறைக்கு மாற்றி கொடுக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சிக்கு எதிராக, மக்கள் சேவைக்கு மாறாக, கணினி பணியில் மூழ்கடிப்பதை தவிர்த்து, அப்பணிக்கு வேறு நபர்களை நியமிக்க வேண்டும்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம், தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். துணை தலைவர் சத்யா நன்றி கூறினார்.