தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கடன் பிரச்னையால் செவிலியர் விபரீதம்

கடன் பிரச்னையால் செவிலியர் விபரீதம்

கடன் பிரச்னையால் செவிலியர் விபரீதம்


ADDED : ஜூலை 26, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 02:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் சாரங்கபாணி, 35, பெயின்டர். இவரது மனைவி சாந்தி, 29. காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சாந்தி சூளகிரி அரசு மருத்துவமனை, 108 ஆம்பு-லன்சில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். வீடு கட்ட சாந்தியின் நகைகளை சாரங்கபாணி அடகு வைத்ததுடன், சாந்தி பெயரில் மகளிர் சங்கத்தில் கடன் வாங்கியுள்ளார். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து கடனை கட்ட முடியவில்லை, என்ன செய்-வது என தெரியவில்லை எனவும், மனஉளைச்சலாக இருப்பதா-கவும், தன் தாய் மாதம்மாளிடம், சாந்தி அடிக்கடி கூறி வந்-துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம், 1:15 மணிக்கு சாந்தி, வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.மண் கடத்தியவர் கைது

மொரப்பூர், ஜூலை 26

மொரப்பூர் எஸ்.ஐ., கோகுல், எஸ்.எஸ்.ஐ., மாணிக்கவாசகம் மற்றும் ஏட்டு சிசுபாலன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, மொரப்பூர் - தர்மபுரி சாலையில் இருந்து, ராமா-புரம் செல்லும் பிரிவு ரோட்டில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டர் டிரைலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி, 2 யூனிட் கரிசல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டர் ஓட்-டுனர் ஈஞ்சானுாரைச் சேர்ந்த காமராஜ், 53, என்பவரை கைது செய்த போலீசார், டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us