/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்ற சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்
/
தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்ற சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்
தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்ற சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்
தேர்தல் கால வாக்குறுதியை அரசு நிறைவேற்ற சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்
ADDED : நவ 02, 2025 01:28 AM
தர்மபுரி, தமிழ்நாடு
சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம்,
தர்மபுரியில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் முனிரத்தினம் தலைமை
வகித்தார். மாநில தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர்
அண்ணாதுரை, அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர்
சிவக்குமார் உட்பட பலர் பேசினர்.
சத்துணவு அமைப்பாளர்களுக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களில் கூடுதல் பொறுப்பு வழங்குவதை
கைவிட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் மதிய உணவிற்கான, 9 மற்றும்,
10ம் வகுப்பு மாணவர்களுக்கான உணவு மானியம், 7 மாதங்களாக வழங்காமல்
நிலுவையில் உள்ளது. காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ள காரணத்தினால்,
சத்துணவு அமைப்பாளர்கள் சமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, சமையலர்,
உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
எம்.ஜி.ஆர்., சத்துணவு
திட்டத்தில், 42 ஆண்டுகளாக தொகுப்பூதியம், சிறப்பு கால முறை
ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களை தேர்தல் கால
வாக்குறுதியில் அறிவித்தது போல் வாக்குறுதி எண், 313ன் படி,
காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். சத்துணவு திட்டத்தில்
உள்ள, 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சத்துணவு
திட்டத்தில், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவோம் என்ற
அரசின் அறிவிப்பு கிடப்பில் உள்ளது. எனவே, இந்த காலிப்பணியிடங்களை
உடடியாக நிரப்ப வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.

