ADDED : செப் 02, 2026 05:59 AM
பாப்பிரெட்டிப்பட்டி:தமிழ்நாடு
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய
அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார்.
பொருளாளர் கோவிந்தம்மாள், நிர்வாகிகள் சந்திரா மகேஸ்வரி, கவிதா,
முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சரஸ்வதி வரவேற்றார். மாநில
செயலாளர் தங்கராஜ் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு
திட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம்
வழங்க வேண்டும். காலை உணவு திட்ட பணிகளை, சத்துணவு ஊழியர்களுககு
வழங்க வேண்டும். சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களை
பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டது.
இதில் துணை பி.டி.ஓ., இளையராஜா உள்ளிட்ட
அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வட்ட கிளை செயலாளர்
மோகன் நன்றி கூறினார். இதேபோன்று கடத்துார் பி.டி.ஓ., அலுவலகம் முன்பும்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
