sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நில அளவீடு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம்; விவசாயிகள் குற்றச்சாட்டு

/

நில அளவீடு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம்; விவசாயிகள் குற்றச்சாட்டு

நில அளவீடு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம்; விவசாயிகள் குற்றச்சாட்டு

நில அளவீடு செய்வதில் அதிகாரிகள் மெத்தனம்; விவசாயிகள் குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 27, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: நில அளவீடு செய்ய பணம் கட்டி, இரு ஆண்டுகள் ஆனாலும் அதிகாரிகள் அளவீடு செய்ய வருவதில்லை என, விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

தர்மபுரியில், கலெக்டர் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், விவசாயிகள் பேசியதாவது: நில அளவை துறையில், விவசாயிகள் தங்களுடைய பட்டா நிலங்களை அளவீடு செய்ய பணம் கட்டி, இரு ஆண்டுகள் ஆகியும் துறை சார்ந்த அதிகாரிகள் அளவீடு செய்ய வருவதில்லை. மேலும், தொடர்ந்து முயற்சி செய்து அளவீடு செய்தால், அதற்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை தொடர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம், மானியத்தில் டிராக்டர் பெறுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்தால், கேன்சல் ஆகிவிடுகிறது. எனவே, விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கும் திட்டங்களை, முறையாக தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ மழைக்கு முன் பாசன கால்வாய்களை துார் வாரி, தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.

இதற்கு, பதிலளித்து பேசிய கலெக்டர் சாந்தி,'' நில அளவை துறையில், மனு அளித்து கிடப்பில் உள்ள அனைத்தும் உடனடியாக, அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு திட்டங்கள், மானியங்கள் அனைத்தும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் முழு நடவடிக்கை எடுக்கும்,'' என்றார்.

கோபமடைந்த கலெக்டர்

விவசாயிகள் பேசுகையில், பேரிச்சை சாகுபடிக்கு அரசு மானியம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. நெல்லி, கொய்யா, சப்போட்டா உள்ளிட்டவற்றிற்கும் மானியம் வழங்க வேண்டும். கடந்தாண்டு பயிரிட்ட கரும்புக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தோம். வறட்சியால் கரும்பு தோட்டம் காய்ந்து விட்டது. இது குறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் பார்வையிட வரவில்லை, இழப்பீடும் தரவில்லை என்று கூறினர். இதற்கு அதிகாரிகள் தரப்பில், இந்தாண்டு கரும்புக்கு யாரும் இன்சூரன்ஸ் செய்யவில்லை என தெரிவித்தனர்.

இதில், கோபமடைந்த கலெக்டர் சாந்தி, 'மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டங்களை துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக தெரியப்படுத்துவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகள் தான். கடந்தாண்டு கரும்புக்கு இன்சூரன்ஸ் செய்தவர்கள் விவரம், இழப்பீடு பெற்றவர்கள் குறித்த தகவல் இல்லையா. அதிகாரிகள் இனியாவது அரசின் திட்டங்கள், மானியம் குறித்த தகவல், இழப்பீடு வழங்கும் விவரங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துங்கள்' என்றார்.






      Dinamalar
      Follow us