/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அளவீடு
/
அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அளவீடு
அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அளவீடு
அரசு ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அளவீடு
ADDED : ஜன 26, 2025 04:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிர-மிப்பு செய்து கட்டடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்த அதிகாரிகள் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்-டனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் மெயின் ரோட்டில், ஓடை புறம்-போக்கு, கிணறு, தரிசு புறம்போக்கு கிணறு என, அரசு பதி-வேட்டில் உள்ளது. இந்த சர்வே எண்ணிலுள்ள ஓடை புறம்-போக்கு இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம், வீடுகள் கட்டியுள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் வருவாய் துறையினருக்கும் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி முன்னிலையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட சார் ஆய்வாளர் முருகன், வி.ஏ.ஓ., நித்யா உள்ளிட்ட வருவாய் துறையினர், ஆக்-கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் நிலத்தை, நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த அளவீடு பணி முடிவ-டைந்ததில், 15க்கும் மேற்பட்டோர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளது தெரியவந்தது.