கோவில் பங்காளிகள் எதிர்ப்பு திரும்பி சென்ற அதிகாரிகள்
கோவில் பங்காளிகள் எதிர்ப்பு திரும்பி சென்ற அதிகாரிகள்
ADDED : ஜூன் 20, 2026 05:20 AM
தர்மபுரி; தர்மபுரி அருகே குண்டலப்பட்டியில், 18 கோம்பு பங்காளிகளுக்கு சொந்தமான திம்மராய சுவாமி கோவில் நிலத்தை, அளவீடு செய்ய வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, கோவில் பங்காளிகள், பக்தர்கள் எதிர்ப்பு தெரி-வித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி அருகே மல்லிகுட்டை பஞ்.,ல், திம்மராய சுவாமி கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 180 கிராமங்களை சேர்ந்த, 18 கோம்பு பங்காளிகளுக்கு இக்கோவில் பாத்தி-யப்பட்டது.
கோவில் பெயரில், 2 ஏக்கர், கோம்பு பங்காளிகள் பெயரில், 2 ஏக்கர் என மொத்தம், 4 ஏக்கர் நிலம் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோம்பு பங்காளிகள் ஒன்று சேர்ந்து, சித்திரை திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில், 18 கோம்பு பங்காளிகளில், ஒரு பங்காளி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.பிரிந்து சென்ற பங்காளிகள் கோவிலுக்கு சொந்த-மான நிலத்தை, ஹிந்து சமய அறநிலைய துறை-யிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதைய-டுத்து, செயல் அலுவலர் கீதாஞ்சலி, ஹிந்து சமய அறநிலையத்துறை நில அளவை தாசில்தார் மாதேஷ் ஆகியோர், நேற்று திம்மராய சுவாமி கோவிலுக்கு வந்தனர். பங்காளிகள் கட்-டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அளவீடு செய்ய முயன்றபோது, மற்ற பங்காளிகள், பக்தர்கள் சேர்ந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்யாமல் சென்றனர்.
