ADDED : பிப் 03, 2024 04:03 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பிக்கில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பானா, கட்டு, குறவன், தின்னை ஆகிய பகுதிகளில், 70 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இதுவரை வரவில்லை. இப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனளிக்காததால், நேற்று நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பிக்கில் அருகே உள்ள புதுக்காடு கரம்பு கூட்டுரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
பாப்பாரப்பட்டி போலீசார், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
