ADDED : ஜூலை 11, 2025 01:41 AM
அரூர், அரூர் அருகே, கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆட்டையானுாரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி கம்சலா, 70. இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு மாட்டிற்கு புல் அறுக்க தன் தோட்டத்திற்கு சென்றவர் மதியம், 3:00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிவஞானம் என்பவரின் மரவள்ளிகிழங்கு தோட்டத்தில் நெற்றியில் காயமும், மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில், கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காதிலிருந்த தங்கத்தோடு திருடு போகவில்லை.
சம்பவ இடத்திற்கு, மாலை, 5:30 மணிக்கு வந்த மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் ரேடோ சிறிது துாரம் ஓடி விட்டு நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
நிலப்பிரச்னை அல்லது முன்விரோதத்தில் கம்சலா கொலை செய்யப்பட்டரா என, பல்வேறு கோணங்களில், அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.