/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பஸ்சை உரசி சென்ற ஆம்னி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மோதல்
/
அரசு பஸ்சை உரசி சென்ற ஆம்னி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மோதல்
அரசு பஸ்சை உரசி சென்ற ஆம்னி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மோதல்
அரசு பஸ்சை உரசி சென்ற ஆம்னி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மோதல்
ADDED : செப் 23, 2024 03:51 AM
தர்மபுரி: தொப்பூர் கணவாயில், முந்தி சென்றபோது அரசு பஸ் மீது தனியார் ஆம்னி பஸ் உரசியதால், இரு பஸ்களின் டிரைவர்கள், நடத்துனர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் லோகித், 35. இவர் பெங்களூருவில் இருந்து, எர்ணாகுளத்திற்கு தனியார் ஆம்னி பஸ்சை ஓட்டி சென்றார். அவருடன் அதே பகு-தியை சேர்ந்த சேத்தன், 30 என்ற மாற்று டிரைவரும் உடன் வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது, தர்மபுரியில் இருந்து மேட்டூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை உரசியவாறு, ஆம்னி பஸ் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர், தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகே, தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஆம்னி பஸ்சை முந்தி சென்று, குறுக்-கிட்டு நிறுத்தினார். இதில், அரசு பஸ் டிரைவர் வெங்கடா-சலம், 57, நடத்துனர் மாதேஷ், 55, மற்றும் ஆம்னி பஸ் டிரை-வர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, திடீரென மோதலாக மாறி, 4 பேரும் தாக்கி கொண்டனர். இதில், வெங்கடாசலம், மாதேஷ், லோகித், ஆகிய, 3 பேர் காயமடைந்தனர். இது குறித்த புகார் படி, ஆம்னி பஸ் டிரைவர்கள் மற்றும் அரசு பஸ்சின் டிரைவர், நடத்துனர் என, 4 பேர் மீதும், தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 4 பேரும் சாலையில், கடுமையாக தாக்கி கொள்ளும் காட்சி வைரலானது.