/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆம்னி பஸ் மோதி சாய்ந்த மின்கம்பம்
/
ஆம்னி பஸ் மோதி சாய்ந்த மின்கம்பம்
ADDED : ஜன 08, 2026 05:03 AM

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, கடைவீதி, சந்தைமேடு வழியாக, பகல் மற்றும் இரவு நேரங்களில், சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், தனியார் பள்ளி வாகனங்கள் செல்வதால், கடைவீதி சாலையில் தினமும், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், கடைகளின் முன், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதை, போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு
சந்தைமேடு வழியாக வந்த ஆம்னி பஸ் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில், மின்ஒயர்களுடன் கம்பம் சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதில், அதிஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனிடையே, கடைவீதி சாலையில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று, மதியம் முதல் மின்வாரியத்துறையினர் கம்பத்தை அகற்றி சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

