/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
/
ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED : பிப் 06, 2025 05:50 AM
பெரும்பாலை: தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள ஆலாமரத்துார் கிராமத்தில் ஓங்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும், தை மாதத்தில் சாணராப்பட்டி, சோளிக்கவுண்டனுார், பூதநாயக்கன்பட்டி உள்ளிட்ட, 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தீமிதி திருவிழா கொண்டாடி வருகின்றனர். நேற்று நடந்த திருவிழாவில், 5 ஊர்மக்கள் ஒன்றிணைந்து, சிறப்பு பூஜை செய்து, ரோணிப்பட்டி நாகாவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து, 2 கி.மீ., துாரம் மேள தாளம் முழங்க
ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.
அங்கு அமைத்திருந்த, தீக்குண்டத்தில், கோவில் பூசாரிகள் மற்றும் ஏராளமான பக்கதர்கள் தீ மிதித்தனர். மேலும், விவசாயம் செழிக்கவும், தங்களுடைய நேர்த்திகடனை செலுத்தும் வகையில் குண்டத்தில் உப்பை கொட்டி வழிபட்டனர். மாலை, 5 மணிக்கு, 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மாவிளக்கு எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பெரும்பாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.