/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்பு 60 சதவீதம் மட்டுமே அகற்றம்'
/
'பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்பு 60 சதவீதம் மட்டுமே அகற்றம்'
'பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்பு 60 சதவீதம் மட்டுமே அகற்றம்'
'பாப்பாரப்பட்டியில் ஆக்கிரமிப்பு 60 சதவீதம் மட்டுமே அகற்றம்'
ADDED : ஜன 28, 2025 06:36 AM
பாப்பாரப்பட்டி: ''பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளில், 60 சதவீதம் மட்டும் அகற்றப்பட்டுள்ளது,'' என, திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின் படி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, கடந்த ஒரு வாரமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கிறது. ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல், பெரும்பாலான இடங்களில் வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்ததால், திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று பாப்பாரப்பட்டியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் உட்பட நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: பாப்பாரப்பட்டி டவுன் பகுதி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், 60 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டவுடன், உள்ளாட்சி சாலை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். தொடர்ந்து, 2 மாதத்தில் பாப்பாரப்பட்டி ஏரி, எட்டியானுார் ஏரி ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு அலுவலர்கள் துணை போவதாக தெரிந்தால், அவர்கள் மீது குற்ற வழக்கு பதிய, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். பாப்பாரப்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆவின் கடை என்ற பெயரில் பேக்கரி நடத்துகின்றனர். அதிலுள்ள பொருட்களில் தயாரிப்பு தேதி இல்லை. இது, அந்த துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டு சதியுடன் நடக்கிறது. அவர்கள் குறித்து, உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு கூறினார். அப்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி, பென்னாகரம் தாசில்தார் லட்சுமி, ஆர்.ஐ., சுஜாதா மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் உடனிருந்தனர்.

