/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ராகி கொள்முதல் நிலையம ்திறப்பு விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
/
ராகி கொள்முதல் நிலையம ்திறப்பு விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
ராகி கொள்முதல் நிலையம ்திறப்பு விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
ராகி கொள்முதல் நிலையம ்திறப்பு விவசாயிகள் பயன்படுத்த அழைப்பு
ADDED : நவ 07, 2024 05:50 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 3 இடங்-களில் ராகி கொள்முதல் நிலையத்தை, மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தில், அரிசிக்கு பதிலாக, 2 கிலோ ராகி கடந்த, 2022 முதல் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அதிக-ளவில், ராகி சாகுபடி செய்யப்படும் நிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம், 2022 முதல் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 2022 - 2023ல் ஒரு கிலோ ராகி, 35 ரூபாய் என, 27 விவ-சாயிகளிடமிருந்து, 32 டன், 2023 - 2024 ல் ஒரு கிலோ, 38 ரூபாய் என, 493 விவசாயிகளிடமிருந்து, 597 டன் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டிற்கான நேரடி கொள்முதல் நிலையத்தை, தர்மபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பேசுகையில்,''கடந்த, 2 ஆண்டுகளாக, மாவட்டத்தில், தர்மபுரி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட, 3 இடங்-களில் ராகி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் காரீப் மற்றும் ராபி பருவ ராகி கொள்முதல் செய்ய, 3 இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கிலோ ராகி, 42 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.