/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி தர்மபுரியில் பயிற்சி மையம் திறப்பு
/
விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி தர்மபுரியில் பயிற்சி மையம் திறப்பு
விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி தர்மபுரியில் பயிற்சி மையம் திறப்பு
விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி தர்மபுரியில் பயிற்சி மையம் திறப்பு
ADDED : அக் 28, 2024 04:12 AM
தர்மபுரி: தர்மபுரி, பென்னாகரம் ரோட்டில், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள் சார்பில், விஜய்ஸ் ஏஸ் அகாடமி என்ற பெயரில் ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்டு, நீட் மருத்துவ பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து புதிதாக விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி., அகாடமி என்னும் மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம், தர்மபுரி முகமது அலி கிளப் ரோடு, டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, நகராட்சி வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்-ளது.திறப்பு விழாவிற்கு, ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்-களின் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகாபிரவின், தலைமை செயல்பாட்டு அலுவலர் சந்திரபானு ஆகியோர் முன்-னிலை வகித்தனர். விஜய்ஸ் ஏஸ் அகாடமி மூத்த முதல்வர் நாரா-யணமூர்த்தி வரவேற்றார்.
இதில், ஓய்வுபெற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பயிற்சி மையத்தை திறந்து வைத்து, அரசு தேர்வுகளில் எப்படி வெற்றி பெறுவது குறித்து பேசினார். நடராஜ் டி.என்.பி.எஸ்.சி., இன்ஸ்டியூட் இயக்குனர் நடராஜ், இன்ஸ்பயர் ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் மாதேஸ்வரன், சி.ஆர்.பி.எப்., ஓய்வு பெற்ற கமான்டன்ட் கோகுல்குமார் ஆகியோர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என
விளக்கினர்.
இதில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நகராட்சி சேர்மன் லட்சுமி நாட்டான் மாது, தி.மு.க., நகர செய-லாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

