/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொன் முத்துமாரியம்மன் கோவில் தக்கார் நியமிக்க கருத்து கேட்பு
/
பொன் முத்துமாரியம்மன் கோவில் தக்கார் நியமிக்க கருத்து கேட்பு
பொன் முத்துமாரியம்மன் கோவில் தக்கார் நியமிக்க கருத்து கேட்பு
பொன் முத்துமாரியம்மன் கோவில் தக்கார் நியமிக்க கருத்து கேட்பு
ADDED : ஜூலை 27, 2025 01:16 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு, விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொ.மல்லாபுரத்தில் பொன்முத்து மாரியம்மன் மற்றும் உமாமகேஸ்வரி உடனுறை அருணாசலேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இக் கோவில்களை, தனியார் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவிலில் முறையான வரவு செலவு விபரங்கள், உண்டியல் வருவாய் விபரங்கள், உலோக திருமேனிகள், நகை ஆகிய விபரங்கள் முறையாக பராமரிக்காமல், நிர்வாகத்தில் குளறுபடி ஏற்படுத்தி உள்ளனர்.
இதை தடுக்கும் பொருட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகள் படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, நிர்வாக பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.இடைக்கால ஏற்பாடாக அலுவல் சார் தக்கார் நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துரைகளோ, ஆட்சேபனையோ தெரிவிக்க விரும்புவோர் வரும், ஆக., 22க்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் எழுத்து மூலமாக உதவி ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை, செங்குந்தர் திருமண மண்டபம் வளாகம், 4 ரோடு அருகில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி - 1 என்ற முகவரிக்கு அனுப்பலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.