/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு
/
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு
ADDED : ஆக 06, 2025 01:25 AM
தர்மபுரி,பொம்மிடி பகுதி மக்கள், தர்மபுரி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பொம்மிடி டவுன் பகுதியில், பொன் வினாயகர், பொன் முத்துமாரியம்மன் மற்றும் அருணாசலேஸ்வரர் உடனுறை உமா மகேஸ்வரி ஆலயம் உள்ளது. கோவிலில், தலைவர் உட்பட கோவில் நிர்வாக குழு அமைத்து, திருவிழாக்கள் அமாவாசை, பிரதோஷ பூஜை மற்றும் வெள்ளிக்கிழமை நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
அது சமயம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இங்கு அனைத்து சமுதாய மக்களும் பாகுபாடின்றி கலந்து கொள்கின்றனர். இந்த கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதாக தகவல் வெளியானது. இதில், எக்காரணம் கொண்டும் கோவிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது. எங்கள் பகுதி நிர்வாக குழுவினர் பராமரித்து கொள்கிறோம்.இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தனர்.