/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
/
இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
ADDED : அக் 03, 2024 01:30 AM
இலக்கியம்பட்டி பஞ்சாயத்தை
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
தர்மபுரி, அக். 3-
தர்மபுரி நகராட்சியுடன், இலக்கியம்பட்டி பஞ்., இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி நகராட்சிக்கு அடுத்தபடியாக, 34 ஆயிரம் வாக்காளர்கள் என, 69,374 பேர் மக்கள் தொகை கொண்டதாகவும், பரப்பளவில் பெரிய பஞ்., ஆக இலக்கியம்பட்டி உள்ளது. இது, தர்மபுரி நகரை ஒட்டி அமைந்துள்ளது.
இலக்கியம்பட்டி பஞ்., தர்மபுரி நகராட்சியுடன் இணைப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இலக்கியம்பட்டி பஞ்., கிராமசபை கூட்டம் வி.ஜெட்டிஹள்ளி பகுதியில் நடந்தது. , பஞ்., தலைவர் சுதா தலைமை தாங்கினார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்.
இதில், இலக்கியம்பட்டி பஞ்., தர்மபுரி நகராட்சியுடன் இணைத்தால், கூடுதல் வரிச்சுமை ஏற்படும் என்பதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 25 மனுக்களை பொதுமக்கள் பஞ்., தலைவி சுதாவிடம் வழங்கினர். மேலும், இணைப்பு முடிவை கைவிட வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
உதவி திட்ட அலுவலர் செல்வி, துணை தலைவர் வித்யா, பஞ்., செயலாளர் சரவணன் உட்பட வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காவிரி உபரிநீர் திட்டம்
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் பஞ்., கிராம சபை கூட்டம் அவ்வை நகரில் நேற்று நடந்தது. தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டார். இதில், பஞ்., உட்பட்ட பகுதியில் குடிநீர், தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதித்தனர். தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் நலன் காக்க, காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பஞ்., தலைவி கவிதாவிடம் மனு அளித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினர். துணை தலைவர், பஞ்., செயலாளர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.