/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டியை விரைந்து கட்டி முடிக்க உத்தரவு
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டியை விரைந்து கட்டி முடிக்க உத்தரவு
மேல்நிலை நீர்தேக்க தொட்டியை விரைந்து கட்டி முடிக்க உத்தரவு
மேல்நிலை நீர்தேக்க தொட்டியை விரைந்து கட்டி முடிக்க உத்தரவு
ADDED : நவ 25, 2024 01:39 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை, பேரூராட்சி சேர்மன் ஆய்வு செய்து, விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் பேருராட்சிக்குட்பட்ட, 14வது வார்டில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதி பொதுமகக்ளின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசு கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட, 43 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடந்து வருகிறது. இதில், கட்டுமான பணிகளை காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் மனோகரன் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது, உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, வார்டு கவுன்சிலர் ரமேஷ் உடனிருந்தனர்.