தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை

நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை

நிரம்பி வழியும் வரட்டாறு தடுப்பணை


ADDED : நவ 27, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு

நீர்வரத்து வருகிறது.

இதிலிருந்து, திறந்து விடப்படும் தண்ணீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், அரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வரத்துவங்கியது. சித்தேரி மலைப்பகுதியில், கடந்த, 24ல் பெய்த கனமழையால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் தடுப்பணையில் மொத்த கொள்ளளவான, 34.45 அடியில், 34.10 அடிக்கு நீர்மட்டம் இருந்த நிலையில், நேற்று தடுப்பணை நிரம்பியது. தொடர்ந்து, தடுப்பணையில் இருந்து தண்ணீர் வழிந்தோடுகிறது. தடுப்பணைக்கு, 15 கன அடி நீர்வரத்து வருகிறது. தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us