தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நெல் ஏலம் நாளை துவக்கம்

நெல் ஏலம் நாளை துவக்கம்

நெல் ஏலம் நாளை துவக்கம்


ADDED : ஏப் 14, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நாளை முதல் (ஏப்.15) நெல் ஏலம் துவங்குகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பழனியம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வசதிக்காக, 2026 - -27ம் ஆண்டிற்கான நெல் ஏலம் நாளை (ஏப். 15) முதல் துவங்குகிறது. இனி தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் நெல் ஏலம் நடக்கும்.

இந்த மறைமுக (இ--நாம்) ஏலத்தில், உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஏலம் மூலம் நெல்லின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏல விற்பனையில் பங்கேற்று, தங்களின் நெல்லுக்கு அதிகவிலை பெற்று பயனடையலாம். ஏலத்திற்கு கொண்டு வரும் நெல்லை நன்றாக சுத்தப்படுத்தி எடுத்து வர வேண்டும். ஏலம் முடிந்தவுடன் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க ஏதுவாக, விவசாயிகள் தங்களின் அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை தவறாமல் கொண்டு வரவேண்டும்.

விவசாயிகள் கிடங்கில் இருப்பு வைத்து சந்தை மதிப்பில், 50 சதவீதம் வரை ஆண்டுக்கு, 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடனாக பெற்று, உரிய விலை கிடைக்கும் போது, விற்பனை செய்யும் வசதியும் உள்ளது. மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி விற்பனைக்கூடத்தை, 99522 67990, 97877 27595, 73738 82273 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us