/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நெல் அறுக்கும் வாகனம் மோதல் கூட்டுறவு வங்கி செயலாளர் பலி
/
நெல் அறுக்கும் வாகனம் மோதல் கூட்டுறவு வங்கி செயலாளர் பலி
நெல் அறுக்கும் வாகனம் மோதல் கூட்டுறவு வங்கி செயலாளர் பலி
நெல் அறுக்கும் வாகனம் மோதல் கூட்டுறவு வங்கி செயலாளர் பலி
ADDED : ஜன 21, 2025 06:17 AM
கடத்துார்: கடத்துார் அருகே மொபட் மீது, நெல் அறுக்கும் வாகனம் மோதி-யதில் கூட்டுறவு வங்கி செயலாளர் பலியானார்.
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த குண்டல்மடுவு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன், 58. சுங்கரஹள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் அலுவலக வேலையாக தர்மபுரி சென்று விட்டு, மாலையில் தன் ஹோண்டா டியோ மொபட்டில் கடத்துார் - பொம்மிடி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். சில்லாரஹள்ளி தேசிய வங்கி அருகே இரவு, 7:00 மணியளவில், பொம்மிடியில் இருந்து கடத்துார்
நோக்கி வந்த, நெல் அறுக்கும் வாகனம், மொபட் மீது மோதியதில், நெல் அறுக்கும் கம்பி வேடியப்பன் கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். புகார் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.