/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.51 லட்சத்திற்கு ஆப்பிள் வாங்கி மோசடி பாலக்கோடு வியாபாரி கைது
/
ரூ.51 லட்சத்திற்கு ஆப்பிள் வாங்கி மோசடி பாலக்கோடு வியாபாரி கைது
ரூ.51 லட்சத்திற்கு ஆப்பிள் வாங்கி மோசடி பாலக்கோடு வியாபாரி கைது
ரூ.51 லட்சத்திற்கு ஆப்பிள் வாங்கி மோசடி பாலக்கோடு வியாபாரி கைது
ADDED : மே 06, 2025 01:51 AM
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு டவுன், கோட்டை தெருவை சேர்ந்த பழ வியாபாரி முகமது,35, அதே பகுதியை சேர்ந்த அப்சல்முகமது, 40. இருவரும் சேர்ந்து, ஆப்பிள் வியாபாரம் செய்து வந்தனர். காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், ராஜ்புரா பகுதியில் உள்ள ஒரு ஆப்பிள் வியாபாரியிடம், 51 லட்சம் ரூபாய்க்கு இருவரும் ஆப்பிள் வாங்கினர். அதற்கான பணத்தை நீண்ட நாட்களாக கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
ஆப்பிள் வியாபாரி புல்வாமா போலீசில் அளித்த புகார்படி, போலீசார் இருவரையும் தேடி, நேற்று முன்தினம் பாலக்கோடு வந்தனர். காஷ்மீர் போலீசார் முகமதுவை கைது செய்து, பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் படி, முகமதுவை காஷ்மீருக்கு அழைத்து சென்றனர். தலைமறைவாக உள்ள அப்சல் முகமதுவை போலீசார் தேடி வருகின்றனர்.