தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்


ADDED : மார் 30, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி:தர்மபுரியில் உள்ள தேவாலயங்கள் சார்பில், நேற்று நடந்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி மறை மாவட்ட, தர்மபுரி துாய இருதய ஆண்டவர் பேராலயம் சார்பில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று நடந்தது. தர்மபுரி- - சேலம் நெடுஞ்சாலையில், பாரதிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில், பங்குத்தந்தை சூசைராஜ் தலைமை வகித்தார். ஊர்வலம் அன்னசாகரம் சாலை வழியாக சென்று புதிதாக கட்டப்பட்டு வரும் துாய இருதய ஆண்டவர் பேராலயம் வளாகத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து, குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் கலந்து கொண்டனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டி புனித லுார்து அன்னை ஆலயத்தில் நடந்த குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் பங்குத்தந்தை அருள்ஜோதி தலைமையில் கிறிஸ்தவர்கள், குறித்தோலைகளை கையில் ஏந்தி அன்னம் பாடல்கள் பாடி முக்கிய வீதிகள் பவனியாக சென்றனர். தொடர்ந்து தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதே போன்று பொம்மிடி, தென்கரைகோட்டை, கடத்துார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us