sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொடர் நீர்வரத்தால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை

/

தொடர் நீர்வரத்தால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை

தொடர் நீர்வரத்தால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை

தொடர் நீர்வரத்தால் நிரம்பிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை


ADDED : அக் 12, 2025 02:56 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தொடர் நீர்வரத்தால், முழு கொள்ளளவை எட்டிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணையிலிருந்து, உபரி நீர் வினாடிக்கு, 2,550 கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்-களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள, பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பெட்ட-முகிலாளம் பகுதியில் பெய்த தொடர் மழையால், நீர்வரத்து அதி-கரித்து இந்தாண்டு முதன்முறையாக பஞ்சப்பள்ளி அணை முழு-வதுமாக நிரம்பியது. இதனால் அணை பாதுகாப்பு கருதி, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அணை உபரி நீரை நேற்று முன்தினம் திறந்தனர்.நேற்று அதிகாலை, 50 அடி உயரமுள்ள அணையில், முழு கொள்-ளளவான, 50 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியது. அணைக்கு நீர்வ-ரத்து வினாடிக்கு, 2,550 கன அடியாக இருந்தது. இதனால், நேற்று முன்தினம் வரை வினாடிக்கு, 100 கன அடி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணையின் பாதுகாப்பு கரு-தியும், தொடர் நீர்வரத்தின் காரணமாகவும் வினாடிக்கு, 2,550 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் பஞ்சப்பள்ளி, சாமனுார், மாரண்டஹள்ளி, அத்தி-முட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 4,500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும். அணையில் இருந்து உபரி

நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால், நீர்நிலைகளில் நீர்-மட்டம் உயரும் மற்றும் விவசாயம் செழிக்கும் என்பதால், இப்ப-குதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உபரிநீர் முழுவது-மாக வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றின் கரையோரமுள்ள பொதுமக்கள், கால்நடைகளை பத்திரமாக பாதுகாக்கும் படி பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us