/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சோமனஹள்ளி அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்தக்கோரி பெற்றோர் போராட்டம்

ADDED : ஆக 22, 2025 01:37 AM
பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்போது, 665 மாணவ, -மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு பள்ளி தரம் உயர்த்துவது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாததால்,
பெற்றோர் அதிருப்தி அடைந்தனர். கடந்த, 17ம் தேதி தர்மபுரி வந்த முதல்வர், இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என, எதிர்பார்த்த நிலையில், எந்த அறிவிப்பும் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பெற்றோர் பலர் நேற்று, பள்ளியை தரம் உயர்த்தக்கோரி கோஷமிட்டு, பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.