/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவி கூட்டு பலாத்காரம் பெற்றோர் போராட்டம்; மாவட்டத்தில் குழந்தைகள் நல குழு இல்லாததால் சிக்கல்
/
மாணவி கூட்டு பலாத்காரம் பெற்றோர் போராட்டம்; மாவட்டத்தில் குழந்தைகள் நல குழு இல்லாததால் சிக்கல்
மாணவி கூட்டு பலாத்காரம் பெற்றோர் போராட்டம்; மாவட்டத்தில் குழந்தைகள் நல குழு இல்லாததால் சிக்கல்
மாணவி கூட்டு பலாத்காரம் பெற்றோர் போராட்டம்; மாவட்டத்தில் குழந்தைகள் நல குழு இல்லாததால் சிக்கல்
ADDED : பிப் 08, 2025 06:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி, ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், நேற்று மாணவர்-களை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர் போராட்டத்தில் ஈடு-பட்டனர். அதே நேரம் மாவட்டத்தில் குழந்தைகள் நல குழு இல்-லாததால், சிறுமியரை கண்காணிப்பதிலும், பாதிக்கப்பட்டோரை உடனடியாக விசாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே கிராமம் ஒன்றில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும், 13 வயது மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வர-வில்லை. விசாரணையில், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரி-யர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்தது தெரிந்தது. அவர்கள் மூவரையும், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து, கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று பள்ளி இயங்க மாவட்ட நிர்-வாகம் அனுமதியளித்தது.கல்வி அதிகாரிகள் விசாரணைபள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியரிடம் விசாரிக்க அரசு துவக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி தலைமையில், சி.இ.ஓ., முனிராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தாம்சன், தாசில்தார் சத்யா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலு-வலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியர்களிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். ஆர்ப்பாட்டம், அசம்பாவிதங்கள் நடப்-பதை தவிர்க்க பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.எஸ்.பி., பேச்சுவார்த்தைஇந்நிலையில், அப்பகுதியினர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 'மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பாதிக்கப்பட்ட மாணவி வசிக்கும் பகுதி, பள்ளியில் வந்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்' என கூறினர். அவர்களிடம் எஸ்.பி., தங்க-துரை பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''இது போக்சோ வழக்கு என அனைவருக்கும் தெரியும். இது குறித்த கருத்துகளை கூற கூடாது. பள்ளி மாணவி தரப்பிலும், ஊர் மக்கள் சார்பிலும் சில கோரிக்கைகளை வைத்-துள்ளனர். இது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.குழந்தைகள் நலக்குழுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுமி திருமணம், பாலியல் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் சிறுமிகளை கண்காணிக்கவோ, பாதிக்கப்படுவோரை உடனடியாக விசாரிக்-கவோ, கவுன்சிலிங் கொடுக்கவோ குழந்தைகள் நலக்குழு கிருஷ்-ணகிரி மாவட்டத்தில் இல்லை. வேலுார் மாவட்ட அதிகாரிகளே, கிருஷ்ணகிரி பொறுப்பை கூடுதலாக வகிக்கின்றனர். அவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறையோ, வாரத்திற்கு ஒரு முறையோ வரு-கின்றனர். அதுவரை சிறுமிகள் யாரும் பாதிக்கப்பட்டால், காப்ப-கத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் மனநி-லையும் பாதிக்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு குழந்தைகள் நலக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், சைல்டுலைன், குழந்-தைகள் நலக்குழு இணைந்து செயல்பட்டால் தான், இதற்கு முறையான தீர்வாக அமையும்.பா.ம.க., ஆர்ப்பாட்டம்மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்-களை கண்டித்து, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகம் முன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்-பீடு வழங்க வேண்டும், குற்றம்புரிந்த ஆசிரியர்களை குண்டர் சட்-டத்தில் கைது செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.