/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : அக் 18, 2024 02:56 AM
தீபாவளிக்கு முன்கூட்டி சம்பளம்
பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
தர்மபுரி, அக். 18-
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், வெளியிட்டுள்ள அறிக்கை:
தீபாவளி பண்டிகை இம்மாதம், 31ம் தேதி வருவதால், பண்டிகையை கொண்டாடவும், அதற்கான செலவுகளை மேற்கொள்ள உதவியாகவும், அக்., மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பாகவே வழங்க வேண்டும். இவ்வாறு முன்கூட்டியே வழங்கினால், துணி, பட்டாசு, பலகாரங்கள் வாங்க, அது எங்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும், 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உட்பட, 32,500 பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும். கடந்த, 13 ஆண்டுகளாக, 12,500 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, 181ஐ அரசாணையாக்கி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து, தீபாவளி பரிசாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.