/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பா.ம.க., நிர்வாகியை விசாரணைக்கு அழைத்து சென்றதால் கட்சியினர் மறியல்

ADDED : ஆக 04, 2025 08:35 AM
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம், ஆடிப்பெருக்கு விழா நடந்தது. இதில், அமைச்சர் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, பா.ம.க., தலைவர் அன்புமணி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்வது குறித்து விமர்சித்தார். இதை கண்டித்து, தர்மபுரி மாவட்டம், ஏரியூர் பட்டக்காரன் கொட்டாயை சேர்ந்த, மேற்கு மாவட்ட பா.ம.க., துணைத்தலைவர் முத்துலிங்கம், அமைச்சர் பன்னீர்செல்வம் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து பதிவிட்டார். இதையடுத்து, அவரை கைது செய்யக்கோரி பென்னாகரம், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் பென்னாகரம் டி.எஸ்.பி., பாஸ்கரிடம் மனு அளித்தனர்.
விசாரணைக்காக, பா.ம.க., நிர்வாகி முத்துலிங்கம், பென்னாகரம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வரப்பட்டார். இச்செய்தி பரவிய நிலையில், பா.ம.க.,வினர் பென்னாகரம் போலீஸ் ஸ்டேஷன் முன் கூடினர். பின், திடீரென, பா.ம.க., நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர்.