தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பாசஞ்சர் ரயில்கள் தாமதம்: பயணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாசஞ்சர் ரயில்கள் தாமதம்: பயணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாசஞ்சர் ரயில்கள் தாமதம்: பயணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 14, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; பாசஞ்சர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவ-தற்கு கண்டனம் தெரிவித்து, பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் முன், பொதுமக்கள் மற்றும் பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், ஆர்ப்-பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ஆசான் தலைமை வகித்தார்.

இதில் காலை, மாலையில் இயக்கப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில்கள் தொடர்ந்து கால தாமதமாக இயக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஈரோடு - ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலை, மேட்டூர் ரயில் புறப்படும் நேர-மான காலை, 5:00 மணிக்கு இயக்கும் வகையில், நேர அட்டவணையை மாற்ற வேண்டும்.

பொம்மிடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்-கைகளான, கோவை, பெங்களூரு, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய எக்ஸ்பிரஸ்கள், பொம்-மிடி ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us