தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கோவில் வழிபாடு தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கோவில் வழிபாடு தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

கோவில் வழிபாடு தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு


ADDED : ஆக 26, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கெரகோடஅள்-ளியில், செல்லியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலை யில், கெரகோடஅள்ளி மற்றும் தொப்பம்-பட்டியை சேர்ந்த இரு சமூகத்தினர் இடையே, கோவிலில் வழிபாடு தொடர்பாக பிரச்னை யில், கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது.

இதனால் இருத-ரப்பினருக்கும் இடையே, நேற்று அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செம்மலை தலை-மையில், டி.எஸ்.பி., சதீஸ்குமார் முன்னி-லையில் அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருந்-தது. இதில், தொப்பம்பட்டி கிராமத்தினருக்கு ஆத-ரவாக, வி.சி., கட்சி பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மாவட்ட செயலா ளர் சென்னகிருஷ்ணன் தலை-மையில், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 11:45 மணிக்கு அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர். அவர்கள் ஆர்.டி.ஓ., செம்மலை, டி..எஸ்.பி., சதீஸ்குமார் ஆகியோரிடம் தொப்பம்-பட்டியை சேர்ந்தவர்கள் வழிபாடு செய்யவும், கோவில் நிகழ்ச்சிகளில் இணைந்து நடத்தவும் மனு அளித்தனர். கெரகோடஅள்ளியை சேர்ந்த சிலர் தங்களுக்கே கோவில் வழிபாட்டு உரிமை உள்ளதாக தெரிவித்தனர். அங்கு நிலவிய சூழலை கருத்தில் கொண்ட அதிகாரிகள், பேச்சு-வார்த்தையை ஒத்தி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us