ADDED : ஏப் 19, 2025 02:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி::--பாப்பிரெட்டிப்பட்டி பீனியாறு விவசாயிகள் மேம்பாட்டு நலச் சங்கம் சார்பில் ஏ.பள்ளிப்பட்டியில் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ராஜேஸ் வரவேற்றார். இக்கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் கிழங்கு மில்ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர் நிலைகளை அகற்ற வேண்டும். கிழங்கு மில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்திகரிக்கபடாத கழிவுநீர், தரிசு நிலத்தில் தேங்குவதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது.
இதனால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். ஆகவே, தரிசு நிலத்தில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
நடவடிக்கை எடுக்காத நிலையில் கிழங்கு மில் முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

