/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டில் மான் இறைச்சி சமைத்தவருக்கு அபராதம்
/
வீட்டில் மான் இறைச்சி சமைத்தவருக்கு அபராதம்
ADDED : மே 03, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 45.
இவர் நேற்று முன்தினம் மாலை தன் வீட்டில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்டார். இதையறிந்த மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனவர்கள் சாக்கப்பன், வசந்தராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் சென்று சக்திவேலை பிடித்தனர். பின் அவரை, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர் சக்திவேலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.