/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓய்வூதியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 19, 2024 01:42 AM
ஓய்வூதியர்கள் சங்கம்
கண்டன ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு, நவ. 19-
தேர்தல் கால வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகம் முன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுப்ரமணி தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் ராஜன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியமாக, 6,750 ரூபாய் வழங்க வேண்டும். அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், சத்துணவு ஓய்வூதியர்களுக்கு ஈமச்சடங்கு நிதியாக, 25,000 வழங்குவதாக கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசு வாக்குறுதி அளித்து, ஓய்வூதியர்களை ஏமாற்றி வருகிறது. இதனால், தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஒன்றிய துணைத்தலைவர் ராஜா உள்பட, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.