/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2024 01:31 AM
தர்மபுரி, டிச. 11-
தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இதில், தமிழக அரசு தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு நடைமுறையை எளிமை படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு இல்லாத அனைவரையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு, அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவது போல் பொதுத்துறை ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு அறிவிக்கும், அதே தேதியிலிருந்து வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில இணை செயலாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.