தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 28, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க வட்டத்தலைவர் மணி தலைமை வகித்தார். செயலாளர் முருகமாணிக்கம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில், ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள், பஞ்., செயலாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியை ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கமுட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை, 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து, காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

* அரூர் தாலுகா அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், அரூர் வட்டக்கிளை சார்பில், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் முடிமன்னன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

* பென்னாகரத்தில், தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர், பி.டி.ஓ., அலுவலம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க வட்டத்தலைவர் விஜயரங்கம் தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us