ADDED : செப் 24, 2026 01:43 AM

தர்மபுரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில், தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் விஜியன், பொருளாளர் சின்னசாமி, துணைத்தலைவர் ரகுபதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மின்துறையை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். 8வது ஊதிய குழு பரிந்-துரையை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த-வர் களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
முத்தரப்பு ஒப்பந்தத்தில் பென்சன் பாதுகாப்பு அம்சங்களோடு திருத்தம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை வாரி-யமே ஏற்று நடத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர் பணிக்காலத்தை பென்சனுக்கு எடுத்து, பென்சன் திருத்தம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர் களுக்கு ஓய்வுபெறும் அன்றே பணப்ப-லன்களை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
