/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பு.புளியம்பட்டியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் அவதி
/
பு.புளியம்பட்டியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் அவதி
பு.புளியம்பட்டியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் அவதி
பு.புளியம்பட்டியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்கள் கடும் அவதி
ADDED : ஆக 10, 2025 01:15 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி, டானா புதுார், நொச்சிக்குட்டை, தோட்ட சாலை, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை வெளுத்து வாங்கியது.
நகராட்சிக்குட்பட்ட தோட்ட சாலை, அம்மன் நகர் வழியாக செல்லும் சாலையில், மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மழையால் தங்கசாலை வீதி, அரசு மாணவர் விடுதி, விநாயகர் கோவிலை மழை நீர் சூழ்ந்தது. மழை நீர் வடியாமல் சாலை ஓரங்களில், கழிவுநீருடன் தேங்கி நின்றது. மழைநீர் ஓடையில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மழையின் போதும் வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இரவு நேரத்தில் மின் இணைப்பு இல்லாததால், சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
* ஈரோட்டில் நேற்று மதியம், 3:25 மணிக்கு மிதமான வேகத்தில் மழை பெய்ய துவங்கியது. பன்னீர்செல்வம் பார்க், வீரப்பன்சத்திரம், மணிக்கூண்டு, நசியனுார் ரோடு, கருங்கல்பாளைம் என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. 30 நிமிடத்திற்கு பிறகு, மழை நின்றது.
* பவானியில் அதிகபட்சமாக, 20 மி.மீ., மழை பெய்தது. கவுந்தப்பாடி, 8.60, அம்மாபேட்டை, 5.60, வரட்டுபள்ளம் அணை, 6.80, கோபி, 3.40, கொடிவேரி, 10.40 மி.மீ., மழை பதிவானது.