ADDED : ஜூலை 14, 2025 03:46 AM
அரூர்: அரூர் நகர எல்லை பகுதிக்குள் வாகனங்களின் ஏர்ஹாரன்களின் அதிகப்படியான சத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்-றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் நகர பகுதியின் வழியாக, தினமும், திருவண்ணாமலை, திருப்பத்துார், தர்மபுரி, சென்னை, ஓசூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, 170க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இவற்றில், தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்கள் உபயோகம் அதிக-ளவில் உள்ளது. அரூர் நகர பகுதிக்குள் அதிவேகத்துடன் வரும் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் ஏர்ஹாரன்களை பயன்ப-டுத்துவதால் ஏற்படும் அதிகப்படியான ஒலியால் முதியோர்கள், நோயாளிகள் உட்பட பலர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், டூவீலரில் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்து விபத்தில் சிக்-குகின்றனர். எனவே, மோட்டார் வாகன அதிகாரிகள் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து நடவ-டிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.