தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குடிநீர் கேட்டு பஸ்சை சிறை பிடித்த மக்கள்

குடிநீர் கேட்டு பஸ்சை சிறை பிடித்த மக்கள்

குடிநீர் கேட்டு பஸ்சை சிறை பிடித்த மக்கள்


ADDED : ஜன 31, 2026 08:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 08:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, மாதேமங்கலம் பஞ்.,க்குட்பட்ட வெங்கட்டம்பட்டி கிராமத்தில், 1,500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மாதேமங்கலம் பஞ்., நிர்வாகம் சார்பில், ஓகேனக்கல் குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதேபோல், ஆழ்துளை கிணறு மூலம் வழங்கி வந்த, குடிநீர் முறையாக வழங்கவில்லை.

இது குறித்து, பஞ்., செயலாளர் மற்றும் நல்லம்பள்ளி பி.டி.ஓ.,விடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை, பஞ்., நிர்வாகம் மற்றும் பி.டி.ஓ.,வை கண்டித்து, தர்மபுரி - மிட்டாரெட்டிஹள்ளி நெடுஞ்சாலை, வெங்கடம்பட்டியில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி பி.டி.ஓ., நீலமேகம், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதை தொடர்ந்து, பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us