/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வி.ஏ.ஓ., அலுவலகம் மக்கள் முற்றுகை
/
வி.ஏ.ஓ., அலுவலகம் மக்கள் முற்றுகை
ADDED : ஜூலை 11, 2024 12:03 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த மோட்டூரில், 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க, ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மோட்டூரை சேர்ந்த, 6 பேருக்கும், அண்ணல்நகரை சேர்ந்த, 40 பேருக்கும் இன்று, (ஜூலை, 11) தர்-மபுரி பாளையம்புதுாரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில், வீட்டுமனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்-ளது. இந்நிலையில் தங்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் அண்ணல் நகரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க எதிர்ப்பு தெரி-வித்து, மோட்டூர் கிராம மக்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு கே.வேட்ரப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்கு பதிலடியாக, மொரப்பூர் அண்ணல் நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து, மோட்டூர் செல்லும் சாலையை மோட்டூர் கிராம மக்கள் பயன்படுத்தக் கூடாது எனக்கூறி, அண்ணல் நகரை சேர்ந்த பொது-மக்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை, 4:45 மணிக்கு, அரூர் - தர்மபுரி சாலையில், மொரப்பூர் சந்தைமேட்டில் சாலைம-றியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் தாசில்தார் ராதாகி-ருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.