/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை

ADDED : நவ 19, 2024 01:41 AM
குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை மக்கள் முற்றுகை
அரூர், நவ. 19-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மோப்பிரிப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட எட்டிப்பட்டியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு கடந்த ஓராண்டாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. 4 நாட்களுக்க ஒருமுறை, ஒகேனக்கல் குடிநீர் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும், 3 குடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, கிராம மக்கள் பலமுறை பஞ்., நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் குடிநீர் வசதி கேட்டும், மெத்தனம் காட்டி வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று பகல், 11:30 மணிக்கு அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பி.டி.ஓ., இளங்குமரன், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.