/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெயிலை சமாளிக்க ஒகேனக்கல்லில் திரண்ட மக்கள்
/
வெயிலை சமாளிக்க ஒகேனக்கல்லில் திரண்ட மக்கள்
ADDED : ஏப் 28, 2025 07:44 AM
ஒகேனக்கல்: ேகாடை வெயிலை சமாளிக்க, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. இங்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஒகேனக்கல்லில் வினாடிக்கு, 2,500 கன அடியாக நீர்வரத்து உள்ளது. நேற்று, வாரவிடுமுறையால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 20,000க்கும் மேல் காணப்பட்டது.
இவர்கள், வெயிலின் தாக்கத்தை குறைக்க, மசாஜ் செய்து, காவிரியாற்றில் குளித்தனர். தொடர்ந்து, ஒகேனக்கல்லில் பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும், குடும்பத்தோடு, பாறைகளுக்கு இடையே காவிரியாற்றில் பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். பரிசல்கள் கொத்திக்கல் பரிசல் துறையில் இருந்து, மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டன.