/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பில்பருத்தி பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் அவதி ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு இல்லாத அவலம்

ADDED : டிச 27, 2024 12:57 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 27---
பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பில் பருத்தி அடுத்த புத்தர் நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறுடன் சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. ஆனால் தண்ணீர் வருவதில்லை. நெடுந்தொலைவு சென்று வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
ஒகேனக்கல் குடிநீர் பைப் லைன் இதுவரை இக்கிராமத்திற்கு அமைக்கவில்லை. இதனால் மக்கள், குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வாரத்தில், இரு நாள் டிராக்டர் மூலம் வீட்டுக்கு, 5 குடம் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: இந்த புத்தர் நகரில், 15 ஆண்டுகளுக்கு மேலாக, நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றோம். இதுவரை ஒகேனக்கல் குடிநீர் எங்களுக்கு இல்லை. ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் சரியாக வருவதில்லை. பொம்மிடி ஊராட்சி பகுதியில் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றோம். தினந்தோறும் கடும் அவதிக்கு ஆளாகின்றோம். வாரத்தில், இரண்டு நாட்கள் ஒகேனக்கல் குடிநீர் டிராக்டர் மூலம் வழங்குகின்றனர். அதுவும் போதுமானதாக இல்லை. இப்பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இரவு நேரத்தில், இருளில் தவிக்கிறோம். மலை பகுதி என்பதால் விஷ ஜந்துக்கள் அதிக அளவில் உள்ளது. குழந்தைகள் வெளியில் நடமாட முடியாத சூழல் உள்ளது. ஆகவே இப்பதிக்கு அடிப்படை வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு கூறினர்.