/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைய ஜெர்த்தலாவ் பஞ்., மக்கள் எதிர்ப்பு
/
பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைய ஜெர்த்தலாவ் பஞ்., மக்கள் எதிர்ப்பு
பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைய ஜெர்த்தலாவ் பஞ்., மக்கள் எதிர்ப்பு
பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைய ஜெர்த்தலாவ் பஞ்., மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 21, 2025 06:18 AM
தர்மபுரி: பாலக்கோடு அடுத்த ஜெர்த்தலாவ் பஞ்., கிராம மக்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட ஜெர்த்-தலாவ் பஞ்.,ஐ பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைக்கப்படுவ-தாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பஞ்., பல கிராம பகுதிகளையும், விவசாய
நிலப்பரப்பையும் கொண்டது. விவசாய நிலப்பரப்பை அடிப்படையாக கொண்ட கிராமங்களை உள்ளடக்-கிய இந்த பஞ்., மக்கள், அவர்களுக்கான வசிப்பிடத்தை, தங்க-ளது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், பயனடையும் பயனாளிகள், அவற்றை நம்பியே தங்களின் அடிப்-படை தேவைகளை பூர்த்தி செய்து வாழ்கின்றனர். இந்த பஞ்.,ஐ பாலக்கோடு பேரூராட்சியுடன்
இணைக்கும் பட்சத்தில், கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். இதேபோல், ஜெர்த்தலாவ் பஞ்.,க்கு உட்பட்ட நாகப்பட்டியான் கொட்டாய், ராமணன்கொட்டாய், எள்ளுக்கான்கொட்டாய், பனந்-ததோப்பு,
ஜாடுகொட்டாய், பாரதி நகர், கூசிகொட்டாய் உள்-ளிட்ட பல்வேறு கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும், அதிக வரி செலுத்தும் நிலை ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலன்கருதி இந்த பஞ்.,ஐ
பேரூராட்சி-யுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்து, அரசின் முடிவை திரும்பபெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

