/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முள்ளுவாடி கொல்ல மாரியம்மன் கோவிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு
/
முள்ளுவாடி கொல்ல மாரியம்மன் கோவிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு
முள்ளுவாடி கொல்ல மாரியம்மன் கோவிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு
முள்ளுவாடி கொல்ல மாரியம்மன் கோவிலை இடிக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 10, 2025 01:15 AM
பென்னாகரம்: பென்னாகரம், முள்ளுவாடியில், 18 கிராமங்களுக்கு சொந்தமான பழமையான கொல்ல மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, கோவில் அருகே உள்ள வீட்டு உரிமையாளர் மோகன், தன் வீட்டிற்கு சென்றுவர போதிய பாதை வசதி இல்லை. கோவிலின் முன்புற பகுதி, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மோகனின் வீட்டிற்கு பாதை அமைத்துத்தர, அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி, தாசில்தார் லட்சுமி, பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர், 20 போலீசாருடன், பேரூராட்சி பணியாளர்கள் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர். அங்கு வந்த, 18 ஊர் முக்கியஸ்தார்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், வழக்கு தொடர்ந்த மோகனிடம், 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவு எட்டவில்லை என்றால், ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்வதாக ஊர்மக்கள் கூறினர். இதையெடுத்து, அதிகாரிகள், 15 நாட்கள் கால அவகாசம் தந்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

