/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலத்தில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

ADDED : பிப் 13, 2024 11:22 AM
காரிமங்கலம்: தர்மபுரி, காரிமங்கலம் டவுன் பகுதியில் ஓட்டல், மளிகை, இறைச்சி, காய்கறி, ஜவுளி உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. மேலும், வங்கிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், பிரசித்தி பெற்ற ராமசாமி கோவிலும் உள்ளது. இவற்றை சுற்றி காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
காரிமங்கலத்தை சுற்றியுள்ள விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கால்நடைகளை இங்குள்ள சந்தைக்கு விற்பனை செய்ய வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பல்வேறு கடைகளில், முறையான பார்க்கிங் வசதியில்லை. இதனால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, டவுன் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.