/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கம்ப்யூட்டர் பழுதால் மக்கள் அவதி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கம்ப்யூட்டர் பழுதால் மக்கள் அவதி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கம்ப்யூட்டர் பழுதால் மக்கள் அவதி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கம்ப்யூட்டர் பழுதால் மக்கள் அவதி
ADDED : அக் 08, 2025 01:42 AM
நல்லம்பள்ளி, நல்லம்பள்ளி அருகே, நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் கம்ப்யூட்டர், பிரிண்டர் மிஷின்கள் பழுதால், மக்கள் அவதியடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, டொக்குபோதனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வெள்ளக்கல் கிராமத்தில்,'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது.
இதில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா மாற்றம், புதிய மின் இணைப்பு, ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.
முகாமில், ஆதார் பிரிவில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் மிஷின்கள் பழுது ஏற்பட்டதால், மனுக்கள் பதிவேற்றம் தடைபட்டது. இதை சரிசெய்யக்கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சரிசெய்ய தாமதமானதால், முகாமில் மனு அளிக்காமல் அங்கிருந்து வெளியேறினர். இதனால் ஆதார் பிரிவில் நேற்று மாலை வரை மக்கள் கூட்டமின்றி அலுவலர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்.முகாமில் ஆதார் கார்டில் திருத்தம் உள்ளிட்டவற்றிற்கு வந்த பள்ளி குழந்தைகள், கை குழந்தைகளுடன் வந்த பெண்கள், முதியோர் என அனைவரும் அவதிக்கு ஆளாகினர்.