/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டி 5 ஆண்டுகளாக அலையும் மக்கள்
/
குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டி 5 ஆண்டுகளாக அலையும் மக்கள்
குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டி 5 ஆண்டுகளாக அலையும் மக்கள்
குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டி 5 ஆண்டுகளாக அலையும் மக்கள்
ADDED : பிப் 19, 2025 01:16 AM
குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டி 5 ஆண்டுகளாக அலையும் மக்கள்
கடத்துார், கடத்துார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சி மூலம், மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. சொந்தமாக வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்க, பேரூராட்சியில் பணம் செலுத்தினால், வீட்டிற்கு குடிநீர் இணைப்பு தரப்படுகிறது.
அதன்படி, தர்மபுரி- - பொம்மிடி ரோடு பகுதியில் வசிப்பவர்கள் கடந்த, 2020ல் குடிநீர் இணைப்பு வேண்டி பணம் செலுத்தினர். ஆனால், இதுவரை குடிநீர் இணைப்பு வழங்காமல், பேரூராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். பணம் கொடுத்து குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முறையாக பேரூராட்சியில் அனுமதி பெற்று, வீடுகள் கட்டி வசிப்பதாகவும், ஆனால் கடந்த, 5 ஆண்டுகளாக சாலை வசதியோ, தெரு விளக்கு வசதியோ, பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் விஜய்சங்கரிடம் கேட்டபோது, ''இது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அந்த பிரிவை பார்ப்பவர் வந்தவுடன் பேசுங்கள். அது தொடர்பாக கூறுகிறேன்,''
என்றார்.