/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் முற்றுகை
/
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் முற்றுகை
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் முற்றுகை
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் முற்றுகை
ADDED : ஜூன் 24, 2025 01:53 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஊராட்சியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு, தினமும் வரும் குடிமகன்கள் குடித்து விட்டு, தகராறில் ஈடுபடுவதும், சாலையில் பாட்டிலை உடைத்தும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் உள்ளனர். இதனால் குடியிருப்பு வாசிகள், அவ்வழியே பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே, கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் பலனில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பகல், 12:00 மணியளவில் டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் தலைமையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன், மாவட்ட மது விலக்கு ஆய தீர்வை உதவி ஆணையர் நர்மதா, கோட்ட ஆய அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 10 நாட்களில் கடையை இடமாற்றம் செய்வதாக உறுதி கூறியதால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.